எம்சிஐ-ன் மருத்துவ தகுதித் தேர்வு: லிம்ரா நடத்தும் சிறப்பு பயிற்சி வகுப்பில் சேரலாம்

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இந்தியாவில் டாக்டராக பணியாற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்தும் தகுதித் தேர்வுக்கான (FMGE) பயிற்சியை லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனம் வழங்கி வருகிறது.
இதுகுறித்து லிம்ரா நிறுவன இயக்குநர் முகமது கனி, மேலும் கூறியதாவது:
FMGE ஸ்கிரீனிங் டெஸ்டில் மருத்துவ மாணவர்கள் 5 ஆண்டுகளில் படித்த 19 பாடங்களிலிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தகுதித் தேர்வுக்காக ஐந்தரை மாத பயிற்சியில் 400 மணி நேர வகுப்புகளும், 200 மணி நேர தேர்வு மற்றும் கலந்தாய்வும் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு வார மற்றும் மாத இறுதியிலும் மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட மருத்துவப் பேராசிரியருடன் விடைகள் குறித்து கலந்துரையாடல் நடத்தப்படும். கூடுதல் மதிப்பெண் பெற அறிவுரை வழங்கப்படும்.
அதேபோல, லிம்ரா நிறுவனம் கடந்த 6 ஆண்டுகளில் பிலிப்பைன்ஸ் நாட்டில் இயங்கும் தவோ மருத்துவக் கல்லூரி மற்றும் லைசியம் நார்த் வெஸ்டர்ன் மருத்துவப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நம் மாணவர்கள் 100 பேருக்கு மேல் இடம் பெற்றுத் தந்துள்ளது.
அந்த மாணவர்கள் இந்தியா திரும்பியவுடன் எழுத வேண்டிய எம்சிஐ தகுதித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை லிம்ரா மாணவர்களுக்கு 3 மற்றும் 4-ம் ஆண்டு படிக்கும்போதே தரத் தொடங்குகிறது. பிறகு மேலும் பயிற்சி அளித்து FMGE ஸ்கிரீனிங் டெஸ்டில் வெற்றி பெறச் செய்கிறது என்றார்.
மேலும் விவரங்களுக்கு லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ், 177, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, எஸ்.எம்.எஸ். சென்டர், முதல் மாடி, மைலாப்பூர், சென்னை-600004. தொலைபேசி: 9444615363 / 9445483333 / 9444276829 / 9445783333.
http://tamil.thehindu.com/tamilnadu/article19767392.ece