கல்லீரலை பலப்படுத்தும் ஆவாரை

HEALTH TIPS

நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், கல்லீரலை பலப்படுத்த கூடியதும், சிறுநீர் தாரையில் ஏற்படும் பிரச்னைகளை போக்கும் தன்மை கொண்டதுமான ஆவாரை பூவின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

சாலையோரங்களில் காணக்கூடியது ஆவாரை. அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட இது வெள்ளைபோக்கை தடுக்க கூடியதாக விளங்குகிறது. உடலுக்கு பலத்தை கொடுக்க கூடியது. உடல் தேற்றியாக விளங்குகிறது. சர்க்கரை நோய், காசநோய்க்கு ஆவாரை மருந்தாகிறது. தோல்நோய்களை குணப்படுத்தும் இது வியர்வை நாற்றத்தை போக்குகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி கல்லீரலை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்: 

ஆவாரம் பூ, சீரகம், பனங்கற்கண்டு. செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் விடவும். இதில், சுமார் 10 ஆவாரம் பூ போடவும். இதனுடன் சீரகம், பனங்கற்கண்டு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர கல்லீரல் பலப்படும். கல்லீரல் நோய்களை குணப்படுத்துகிறது. ஜீரண கோளாறு சரியாகும். சிறுநீர்தாரையில் ஏற்படும் பிரச்னைகளை சரிசெய்கிறது. உடலில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை போக்குகிறது.

ஆவாரை பல்வேறு நோய்களை தீர்க்கும் தன்மை கொண்டதாக விளங்குகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி சிறுநீர்தாரை எரிச்சல், வெள்ளைபோக்கு பிரச்னையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, பனங்கற்கண்டு, பால். செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர் எடுக்கவும். இதில், பனங்கற்கண்டு, ஆவாரம் பூ சேர்த்து வேக வைக்கவும். பின்னர் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி குடித்துவர சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல், சிறுநீரோடு ரத்தம் கலந்து வெளிவருவது குணமாகும்.

வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும். பூஞ்சை காளான்கள், நோய் கிருமிகளை அழிக்கும். தொற்றுநோய் வராமல் தடுக்கும். ஆவாரம் பூவை பயன்படுத்தி உடலில் ஏற்படும் நமைச்சலை போக்கி உடலுக்கு பொலிவு தரும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: ஆவாரம் பூ, பச்சை பயறு, பால். செய்முறை: ஆவாரம் பூவை அரைத்து எடுக்கவும். இதனுடன் சிறிது பச்சை பயறு மாவு சேர்க்கவும். பின்னர், பால் விட்டு கலக்கவும். இந்த கலவையை உடலில் நமைச்சல் இருக்கும் இடத்தில் பூசி குளித்துவர நமைச்சல் இல்லாமல் போகும்.

வியர்வை நாற்றம் இருக்காது. இந்த கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவு பெறும். சொரி, சிரங்கு பிரச்னைக்கு இது மேல்பற்று மருந்தாக விளங்குகிறது. வயிறு உப்புசம், பொருமலுக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: சாதிக்காய், சுக்குப்பொடி, சீரகம். செய்முறை: சாதிக்காயோடு சுக்கு பொடி, சீரகம் சேர்த்து தேனீராக்கி குடித்துவர வயிறு பொருமல், உப்புசம் ஆகியவை சரியாகும். வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

http://www.tamilyoungsters.com/2017/09/blog-post_931.html

Leave a Reply

Your email address will not be published.